1. செர்கோஸ்போரா இலைப் புள்ளி: செர்கோஸ்போரா ஜாஸ்மிநிகோலா 
அறிகுறிகள் : 
              
                - 2-8 மிமீ குறுக்களவு கொண்ட வட்ட ஒழுங்கற்ற செம்பழுப்பு புள்ளிகள் இலைகளின் மேற்பரப்பில் தோன்றும்.
 
                - பின்னர் ஒழுங்கற்ற புள்ளிகள் இலைகளின் மற்ற பகுதிகளிலும் பருவும்.
 
               
                
மேலாண்மை : 
              
                -  கார்பென்டிசம்  0.1% தெளிக்கவும் 
 
               
              2. ஆல்டர்னேரியா இலைக் கருகல்: அல்டர்னேரியா ஜாஸ்மிநி, அல்டர்னேரியா அல்டர்னேட்டா 
               
               
              அறிகுறிகள் : 
              
                - இலைகளில் அடர் பழுப்பு புள்ளிகள் தோன்றும்.
 
                - புள்ளிகள் மற்ற பகுதிகளிலும் பரவி இலைகள் கருகத் தொடங்கும்.
 
                - பொது மைய வளையங்கள், காயங்கள் காணப்படும். இந்நோய் தண்டு, இலைக் காம்பு மற்றும் மலர்களை பாதிக்கிறது.
 
               
                
மேலாண்மை : 
              
                - உதிர்ந்த இலைகளை சேகரித்து அழித்துவிட வேண்டும்.
 
                - மேன்கோசெப்  0.25% தெளிக்கவும்.
 
             
            3. கழுத்தழுகல் மற்றும் வேரழுகல் நோய்: ஸ்க்லரோஷியம் ரோல்ஃப்சி 
 
            அறிகுறிகள் : 
            
              - தாவரங்களின் எல்லா நிலைகளிலும் தொற்று ஏற்படும். முதலில் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பின்பு இளம் இலைகள் மஞ்சளாகும். இறுதியில் தாவரம் இறந்துவிடும்.
 
              - வேரில் கறுப்பு நிற மாற்றத்தை காண முடியும்.
 
              - பாதிக்கப்பட்ட திசுக்கள் மற்றும் தண்டுகளில் பூஞ்சை இழை முடிச்சுகள் தோன்றும்.
 
               
              
மேலாண்மை : 
            
              - எருவுடன் டிரைகோடெர்மா விரிடி கலந்து அளிக்கவும்.
 
               
            4. பச்சைப் பூ நோய்: பைட்டோபிளாஸ்மா 
            அறிகுறிகள் : 
            
              - இலைகள் சிறியதாக புதர் போல் காணப்படும். பச்சை இலை போன்று பூக்கள் பூக்கும்.
 
           
            மேலாண்மை : 
            
              - ஆரோக்கியமான தாவரத்தை தேர்ந்தெடுத்து தாவர துண்டுகள் வெட்டவும்.
 
              - நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லிகளை தெளிக்கவும்.
 
              |